Wednesday, January 9, 2008

சுண்டங் கத்தரியில் கத்தரிச் செய்கையை

மன்னிக்கவும் கனகாலமாக நான் பதிவை இடாமைக்கு.விரைவில் சுண்டங் கத்தரியில் கத்தரிச் செய்கையை வீடியோவுடன் பதிகின்றேன்.அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Thursday, November 22, 2007

உருளைக் கிழங்குச்செய்கை

இலங்கையில் உருளைக்கிழங்குச் செய்கையானது 1948 ம் ஆண்டில் விவசாயத்திணைக்களத்தால் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டது அதன்பின் 1957 ம் ஆண்டளவில் மலைநாட்டில் வெற்றிகரமாக பயிரிடப்பட்டது. நாளடைவில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் உருளைக்கிழங்குச் செய்கை விருத்தியடைந்தது.1990 ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையின் மொத்த உற்பத்தியில் 20 % ஆனது யாழ்குடாநாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் தற்போது பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் விஸ்தீரணமும் ஒரு அலகிற்கான உற்பத்தி அளவும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கான காரணங்கள் வருமாறு.
1.நாட்டில் தோன்றிய அமைதியற்ற சுழ்நிலை.
2.விதைக் கிழங்கு விநியோகத்தில் ஏற்படும் சீரின்மை.
3.காலநிலையில் ஏற்படும் சடுதியான மாற்றங்கள்.
4.இதனால் அதிகரித்துச் செல்லும் நோய் பீடை தாக்கங்கள்.
5.அதிகரித்துச் செல்லும் கூலி, உள்ளீட்டுச் செலவுகள்.
6.சீரான சந்தைப்படுத்தல் வசதியீன்மை.
மேற்படி காரணங்களுள் நோய் பீடைத் தாக்கங்கள் பாரிய பங்கை வகிக்கின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதற்கான செலவு அதிகரித்துச் செல்வதால் உற்பத்தி செலவு அதிகரித்துச்செல்கின்றது.அத்துடன் விளைபொருளின் தரமும், சேமித்து வைக்கக்கூடிய தன்மையும் குறைவடைகின்றது.

நோய் பீடைத் தாக்கம் அதிகரித்துச் செல்வதற்கு பின்வரும் காரணங்கள் முக்கியமானவை:
1.சடுதியாக ஏற்படும் காலநிலை மாற்றம்
2.போதிய அளவு சேதனப் பசளைகளைப் பாவிக்காமை.
3.கட்டுப்பாடற்ற மிதமிஞ்சிய இரசாயனப் பாவனை.
4.நோய் பீடைகளைசரியாக இனம்காணாது பொருத்தமற்ற இரசாயனங்களை விசிறுவது.
5.மேற்கூறிய காரணங்களினால் இரசாயனங்களுக்கு எதிர்ப்புத்தன்மை உள்ள புதிய குல வகைப்பீடைகள் உருவாகியமை.
தற்போது நோய்கள் பெருகுவதற்கு வாய்ப்பான காலநிலை உருவாகிஉள்ளதால் நோய்கள் பெருகிப் பாதிப்புக்களை ஏற்படுத்தகூடிய நிலை உருவாகி உள்ளது.
இந்நிலையில் நாம் நோய்பீடைகளை சரியாக இனம்கண்டு பொருத்தமான இரசாயனங்களை பாவிப்பது நன்மைபயக்கும் ஆதலால் கீழ் குறிப்பிடப்படும் நோய்பீடைகளை சரியாக இனம்கண்டு தகுந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.


பிற்கூற்று வெளிறல்.
பைரொப்தரா இன்வெஸ்ரன்ஸ்(PHYTOPHTHORA INFESTANS) எனும் பூஞ்சணமே இந்நோய்க்குரிய காரணியாகும்.இந் நோய் பெரும்பாலும் இலைகளிலேயே ஆரம்பிக்கின்றது சில சமயம் இலைச் சோணை, தண்டு, கிழங்குகளிலும் ஆரம்பிக்கலாம். பயிர் பூக்கும் காலத்தில் பொதுவாக நோய்த்தொற்று கூடுதலாக காணப்படும். மழை அதிகஈரப்பதன் உள்ளபோது வெப்பநிலையும் 15’C- 20’C ஆக இருக்குமாயின் நோயின்தாக்கம் தீவிரமாக காணப்படும். காலநிலை வாய்ப்பாக இருந்தால் நோய்பெருகி முழுஇடமும் தாக்குப்படுவதோடு தண்டுகளில் மென் அழுகலையும் ஏற்படுத்தும்.மழை பெய்யுமாயின் மழைநீர், பனித்தண்ணீருடன் நோய்க்காரணிகள் கழுவப்பட்டு மண்ணுக்குள் செல்வதால் மண்ணிலும் கிழங்குகளிலும் தொற்று ஏற்படும்.
நோயை அடையாளம் காணல்
ஆரம்பத்தில் இலையின்நுனியில் விளிம்புகளில் ஒழுங்கற்ற வடிவமுடைய சிறிய மஞ்சள் புள்ளிகள் உருவாகும். பின்பு புள்ளிகள் பெரிதாகி கடும் பச்சையில் இருந்து கடும்மண்நிறமாக நிறமாற்றமடையும்.இலையின் கீழ்பகுதியை அவதானித்தால் நோய்தாக்கிய பகுதியின் விளிம்பிற்கும் நோய்தாக்காத பகுதிக்கும் இடையில் வெண்மையான பூஞ்சண இழைகள் உருவாகியிருப்பதை காணலாம். பின்பு இலை சுருண்டு தூங்கிக் காணப்படும். கிழங்கின் மேற்பகுதி கடும் நிறமாகி தாக்கப்பட்ட பகுதிகள் கடும் மண்நிறமாக மாறி உலர்ந்து வைரமாக காணப்படும்.
முற்கூற்று வெளிறல்
இது ஓல்ரனேரியா சொலனை என்ற பங்கசுவால் ஏற்படுகின்றது.இதுவும் பிற்கூற்று வெளிறல் போன்று இலைஇ தண்டு என்பனவற்றை தாக்கும். காற்றாலும் பரவக்கூடியது இது பரவ நீர் அவசியமில்லை.உயர் வெப்பநிலையும் உயர் ஈரப்பதனும் வாய்ப்பான சூழல் ஆகும்.ஆரம்பத்தில் பயிரின் அடியில் உள்ள முதிர்ந்த இலைகளை தாக்க தொடங்கும்
அடையாளம் காணல்
ஒழுங்கற்ற கறுப்புச்சேர்ந்த மண்ணிறமான புள்ளிகளாக ஆரம்பித்து பின் ஒருமைய வட்ட வடிவங்களாக பெருத்து செல்லும். கடும் கபிலநிறமான அல்லது கறுப்பு சேர்ந்த கபிலநிறமான பூஞ்சண இழைகள் உருவாகும்.தாக்கப்பட்ட பகுதி மெல்லிய மென்பச்சை நிறமுடைய விளிம்புகளைக் கொண்டிருக்கும். தீவிரமாக பெருகும்போது இலை மஞ்சளைடைந்து காய்ந்து உதிர்ந்து விழும்.

கட்டுப்பாடு
பயிர்ச்செய்கையி;ன் ஆரம்பத்தில் செய்யப்படவேண்டியது.
எதிர்ப்பு இனங்களை நாட்டவும்தொற்றுநீக்கப்பட்ட ஆரோக்கியமான கிழங்குகளை நாட்டவும்.தொடர்ச்சியாக சொலனேசிக் குடும்ப பயிர்களை பயிரிடாது மாற்றுப்பயிர் செய்யவும். முன்னைய போகத்தில் செய்யப்பட்ட பயிர்மீதிகளை உடனடியாக அகற்றவும் நோய்த்தாக்கம் ஏற்பட்டிருப்பின் எரிக்கவும்.
பயிர்ச்செய்கையின் போது செய்யப்படவேண்டியவை.
நோய் ஏற்பட்டவுடன் கட்டுப்படுத்துவது கடினம் ஆகையால் 7 - 10 நாட்கள் இடைவெளியில் சிபார்சுசெய்யப்பட்ட பங்கசு நாசினியை விசிறவும்
ஓரே மருந்தை தொடர்ச்சியாக விசிறாது மாறுபட்ட தொழிற்படுதிறனுடைய மருந்துகளை மாற்றி மாற்றி விசிறவும்;.ஏக்காரணம் கொண்டும் இரண்டுமருந்துகள் கலந்து விசிறக் கூடாது.பூச்சிநாசினியையும் பங்கசுநாசினியையும் கலந்து விசிறக் கூடாது.மழை பெய்யுமாயின் மழை விட்டவுடன் உடனடியாக பூஞ்சணநாசினியை விசிறவும்.